பிறப்புமுதல் இறப்புவரை, வாழ்நாளின் அனைத்து சம்பவங்களும் பிராரப்த கர்மாவில் அடங்கிய வினைப்பதிவுகளின்படியே நடக்கும்.

Advertisment

ஒருவர் பிராரப்த கர்மாவை முழுமையாக அனுப வித்து முடிக்கும்வரை- உடலைவிட்டு உயிர் பிரியாதவகையில் உயிரைப் பாதுகாப்பதில் வல்லமை பெற்றவர் கர்மகாரகனான சனிபக வான்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் எந்த இடத்தில் நின்றாலும், கர்மவினைக்கேற்ற பலனை நிகழ்த்தாமல் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை முடிக்கப் போவது கிடையாது. ஒரு ஆண் தன் ஆயுட்காலத்தில் பெரும்பகுதியை மனைவி, குழந்தைகளுடனேயே கழிக்கிறார்.

நல்ல வாழ்க்கைத்துணையே ஒருவருக்கு வரப் பிரசாதம். ஆணோ பெண்ணோ- வாழ்க்கைத் துணையே வாழ்நாளின் அச்சாணி. ஒரு மனி தனின் கர்ம வினைக்கேற்ப வாழ்நாளை சுப- அசுபமாக மாற்றுபவர் சனி பகவான்.

Advertisment

ss

திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 5, 7, 8, 12-ஆமிடத்தில் சனி அமரும்போது, திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறார். செவ்வாய், ராகு- கேது தோஷத்தால் மட்டுமே திருமணம் தடைப்படுகிறது என்பதில் பலர் அசைக்கமுடி யாத நம்பிக்கை வைத்துள்ளனர். சனி பகவானா லும் திருமணம் தாமதமாகிறது என்பதே நிதர்சனமான உண்மை. திருமணத்திற்கு முன்- பின் மனிதவாழ்வை இயக்கும் மகத்தான சக்தி சனி பகவான்.

ஜென்ம லக்னத்தில் அமர்ந்த சனி பகவானால் தோற்றப்பொலிவு குறைவாக இருக்கும். சிந்தித்து செயல்படும் தன்மையின்றி சோம்பல் மிகுதியாக இருக்கும். 7- ஆம் இடத்தைப் பார்ப் பதால் காலம் தாழ்ந்தே திருமணம் நடைபெறும்.

Advertisment

அத்துடன் தன் திறமைக்கும் தகுதிக்கும் சம்பந்தமில்லாமல் மிகைப்படுத்தலான எதிர் பார்ப்பு இருப்பதால், எதிர்பார்ப்பிற்கிணை யான வரன் கிடைக்காது. தம்பதியரிடம் ஒற்று மைக் குறைவு அதிகமாகும்.

3-ஆம் இடத்திற்கு சனி பார்வை இருப் பதால் மனோதிடம் மிகக்குறைவாக இருக்கும். 10- ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்ப உறுப் பினர்களின் தேவையை நிறைவுசெய்யத் தேவை யான பொருளாதாரமின்றி கஷ்ட ஜீவனமாக இருக்கும். மேலும் களத்திரத்திற்கு ஆரோக் கியக் குறைபாடு இருக்கும்.

இரண்டாம் இடத்தில் நிற்கும் சனி பகவான் குடும்பம் அமைவதையே தடைசெய்வார் அல்லது தாமதமான திருமணம் அல்லது திருமணத்திற்குப் பின் கருத்து வேறுபாடு உருவாகும். வாக்கு ஸ்தானத்தில் சனி என்பதால், கடுமையான வார்த்தைப் பிரயோகமே தம்பதியிடையே கருத்து வேறுபாட்டை மிகுதிப்படுத்தும். ஆரோக்கிய சீர்கேட்டிற்கான பல்வேறு தீய பழக்கங்களுடன் இருப்பார். 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் இல்லற சுகத்தில் தடை ஏற்படுத்துவார். 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் தம்பதியிடையே வம்புவழக்கு, அன்யோன்யம் இன்மை மிகும். 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் களத்திரத் தின்மூலம் ஆதாய பங்கம் ஏற்படுத்துவார். பலருக்கு இரண்டாம் தரமான (தாரம்) குடும்பத்தால் நரக வேதனையைத் தரும் சம்பவங்களை நிகழ்த்துவார்.

ஐந்தாம் இடத்தில் அமரும் சனி பகவான் பூர்வபுண்ணிய பாக்கியத்தைத் தடைசெய்வார். குழந்தை பாக்கியத்தைத் தாமதப்படுத்துவார் அல்லது குழந்தைகளால் மனவேதனையைத் தருவார். பலருக்கு புத்திர சோகத்தால் வாழ் நாளே வெறுமையாரும். 11-ஆமிடத்தைப் பார்ப் பதால் தனவரவு கட்டுப்படுத்தப்படும். மூத்த சகோதர, சகோதரிகளின் தலையீடு இருக்கும். 2, 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடையை சந்திப்பார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் குடும்ப உறுப்பினர் களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பார்கள்.

ஏழாமிடத்தில் அமரும் சனி பகவான் குறைந் தபட்சம் 32 வயதுவரை திருமணத்தைத் தடை செய்வார். வயது வித்தியாசமான களத்திரம் அல்லது வயதான களத்திரம் அல்லது முதுமை யான தோற்றமும், தோற்றப் பொலிவற்ற வரனையும் தருவார். பலருக்கு காதல்- கலப்புத் திருமணத்தைத் தருவார். 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தன் குலத்தவரால்- பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் இருக்கும். பெற்றோரிட மிருந்து பிரித்துவைக்கும். பாக்கியஸ்தான வலிமையைக் குறைக்கும். லக்னத்தைப் பார்ப் பதால் ஜாதகருக்கு சுயமுடிவெடுக்கும் தன்மை இன்மையால் செயல்பாடுகள் சீராக இருக்காது. 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒழுக்கக்குறைவான வியாதிகளால் சுகம், ஆரோக்கியம் கெடும்.

எட்டாமிடத்தில் அமர்ந்த சனி பகவான் நித்திய கண்டம்- பூரண ஆயுளைத் தருவார். கடகம், சிம்ம லக்னத்தவர்கள் திருமணம் நடந்ததையே கதையாகச் சொல்வார்கள். திருமணத்திற்குப்பிறகு தினமும் வம்பு, வழக்கு, சச்சரவு என அதிகபட்சம் விவாகரத்துவரை கொண்டுசெல்வார். 10- ஆமிடத்தைப் பார்ப்பதால் சிறிய வருமானத்திற்கு அதிகமாக உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பமான குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரப் பற்றாக் குறை, வாயினால் வம்பை வரவழைத்துக் கொள்ளுதல் போன்றவை இருக்கும். 5- ஆமிடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியக் குறைவு, புத்திர சோகம், புத்திரர் களால் ஆதாயமின்மை இருக்கும்.

பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்த சனி பகவான் இல்லற இன்பத்தைக் குறைப்பார். கேது வுடன் சேர்ந்த சனி பகவான் இல்லற இன்பத்திற்கு தகுதி இல்லாதவராக்குவார். துறவு மனப்பான்மை மேலோங்கும். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் சமுதாயத்திற்குத் தெரியாத ரகசியமான குடும்ப வாழ்வை வாழவைக்கும். 6-ஆமிடத்தைப் பார்ப் பதால் குடும்ப உறுப்பினர்களால் பொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். 9- ஆமிடத்தைப் பார்ப்பதால் (7-க்கு 3 பாவாத்பாவம்) ரகசியக் குடும்பத்திற்கு அடங்கி, அவமானப்பட்டு தலைமறைவாகும் நிலையும் ஏற்படும். 12-ல் சனி இருப்பவர்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் நிலையே அதிகம். வெளிநாட்டில் வாழ் பவர்களாக இருப்பார்கள் அல்லது சிறை யிலும் வாழ்வைக் கழிக்கநேரலாம். இவர்கள் சிறிதுகாலமாவது தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.

மேலே கூறிய 1, 2, 5, 7, 8, 12-ல் அமர்ந்த சனி பகவானுக்கு லக்ன சுபர், குருவின் சம்பந்தமிருந் தால் பாதிப்பிருக்காது. மேலும் அவருடன் இணைந்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். எனவே, திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சனி நின்ற நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் தரவேண்டும். சனி தோஷத்தை சரிசெய்யும் அமைப்புடைய ஜாதகத்தை இணைக்கவேண்டும்.

பரிகாரம்

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

சனிக்கிழமை, பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

வன்னி மரத்தை வலம் வரவேண்டும்.

சனிக்கிழமை அசைவ உணவு சாப்பிடக் கூடாது.

ஆஞ்சனேயர் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.

காலபைரவர் வழிபாடு மனசஞ்சலத்தைக் குறைக்கும்.

அன்னதானத்திற்கு உதவிசெய்யலாம்.

செல்: 98652 20406